TNPSC Thervupettagam

ஒட்டாவா ஒப்பந்தம் – பின்லாந்து

June 25 , 2025 14 hrs 0 min 18 0
  • எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா மற்றும் போலந்து ஆகியவற்றிற்குப் பிறகு ஒட்டாவா கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் 5வது ஐரோப்பிய நாடாக பின்லாந்து மாறுகிறது.
  • பின்லாந்து நாடானது 2012 ஆம் ஆண்டில் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைந்தது.
  • இந்த ஒட்டாவா ஒப்பந்தம் ஆனது, 1997 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 1999 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் தடை உடன்படிக்கை (ஒட்டாவா ஒப்பந்தம்) ஆனது, மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளின் பயன்பாடு, இருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்கிறது.
  • தற்போது இது 164 ஒப்பந்ததாரர் நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்