ஒப்பந்தம் சாராத நிறுவனங்கள் மீதான நடுவண் ஒப்பந்தம்
December 11 , 2023 603 days 299 0
‘நிறுவனங்கள் குழுமம்’ கோட்பாட்டில் கையொப்பமிடாத நிறுவனங்களும் நடுவண் ஒப்பந்தத்தின் கீழ் கட்டுப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தக் கோட்பாட்டில் கையழுத்திடாத நிறுவனமானாலும், ஒப்பந்தத்தில் ஒரு அங்கத்தினராக இருக்கின்ற, நிறுவனங்கள் குழுமத்தின் உறுப்பினராக இருக்கும் ஒரு நிறுவனம் இந்த நடுவண் ஒப்பந்தத்திற்கு உட்பட வேண்டும் என்று அக்கோட்பாடு கூறுகிறது.
1996 ஆம் ஆண்டு நடுவண் சட்டத்தின் 7வது பிரிவுடன் சேர்த்து பார்க்கையில், 2(1)(h) என்ற சட்டப் பிரிவின் கீழ் "அங்கத்தினர்" என்பதன் வரையறை இதில் கையொப்பம் இட்ட மற்றும் கையொப்பமிடாத அங்கத்தினர் ஆகிய இரண்டும் அடங்கும்.