ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் கடன் வசதி
August 31 , 2024 341 days 319 0
PhonePe நிறுவனமானது அதன் பண வழங்கீட்டு தளத்தில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் மூலமான கடன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தங்கள் வங்கிகளில் இருந்து கடன் வசதிகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வணிக ரீதியிலானப் பணம் செலுத்துவதற்காக ஃபோன்பே தளத்தில் உள்ள UPI உடன் தடையின்றி இணைக்க உதவுகிறது.
இது அவர்களின் மாதாந்திர செலவுகளை சிறப்பாக மேலாண்மை செய்ய உதவுகின்ற, குறுகிய கால கடன் இணக்கத் தன்மையினை வழங்குகிறது.