TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தில் மேலும் 13 இந்திய வங்கிகள்

July 20 , 2025 7 days 45 0
  • சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கான இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது பணம் அனுப்புவதை எளிதாக்குவதற்காக UPI-PayNow இணைப்பில் மேலும் 13 வங்கிகளைச் சேர்க்கிறது.
  • NPCI சர்வதேசப் பண வழங்கீட்டு கழக லிமிடெட் (NIPL) என்பது இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) சர்வதேசப் பிரிவாகும்.
  • இது இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதன் வரம்பை விரிவுபடுத்தி பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது.
  • இது தனிநபர்களிடையேயான நிகழ்நேர பன்னாட்டு நிதிப் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்குகிறது.
  • தற்போது, இந்தியப் பயனர்கள் UPI அடையாள முகவரி மூலம் பணம் பெறலாம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பயனர்களுக்கு அவர்களின் கைபேசி எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரி (VPAs) மூலம் பணம் அனுப்பலாம்.
  • UPI-PayNow சேவையானது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இடையேயான கூட்டு முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான மிகவும் விரிவாக்கப்பட்ட வலையமைப்பில் தற்போது 19 வங்கிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்