ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக வசதியின் மூலம் மேற் கொள்ளப் பட்ட கொடுப்பனவுகளில் சாதனைப் பதிவு
January 4 , 2023 1015 days 561 0
இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக வசதியின் மூலம் (UPI) டிசம்பர் மாதத்தில் 7.82 பில்லியன் அளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப் பட்டுள்ளது.
இதன் மதிப்பு 12.82 ட்ரில்லியன் ரூபாய் (174.6 பில்லியன் டாலர்) ஆகும்.
இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அளவில் 7.12 சதவீத அதிகரிப்பினையும் மற்றும் மதிப்பில் 7.73 சதவீத அதிகரிப்பினையும் குறிக்கிறது.
இதில் ஆண்டிற்கு ஆண்டு உயர்வு என்ற அடிப்படையில், அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 71% மற்றும் 55% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.