அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அனைத்து அவசரகால மற்றும் ஆம்புலன்ஸ் உதவி எண்களையும் மூன்று மாதங்களுக்குள் '112' என்ற ஒற்றை எண்ணாக ஒருங்கிணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவசரகால சிகிச்சைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் உள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
100, 101, 108, 102, 1033, 1091 போன்ற அனைத்து அவசரகால எண்களும் 112 உடன் இணைக்கப்படும்.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முழுமையான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
அவசரகால சிகிச்சைச் சேவைகளுக்கு ஆதரவளிக்க Good Samaritan குறைதீர்க்கும் அமைப்பு ஒன்றும் நிறுவப்படும்.