ஒருங்கிணைந்த சாலை விபத்துகள் தரவுதளத் திட்டம் (iRAD)
September 18 , 2020 1782 days 695 0
மத்திய அரசானது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சாலை விபத்துகள் தரவு தளத் திட்டத்தினை (iRAD) செயல்படுத்துகின்றது. அது தொடர்பான செயலியானது நிகழ்விடத்திலேயே விபத்து குறித்த தகவலைச் சேகரிக்க வழிவகை செய்கின்றது.
ஆரம்பத்தில் இந்தத் திட்டமானது மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப் படவுள்ளது.
இந்தச் செயலியானது காவல் துறை, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் தங்களது கைபேசிகளைப் பயன்படுத்தி நிகழ்விடத்திலேயே விபத்து குறித்த தகவலைச் சேகரிக்க வழிவகை செய்கின்றது.
இந்தத் தரவுகளானது பின்னாளில் சாலைக் கட்டமைப்பு மற்றும் விபத்து குறித்த தரவைப் பதிவு செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தீர்வு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.