ஒருங்கிணைந்த பெருங்கடல் ஆற்றல் குறித்த தகவல் தொகுப்பு வரைபடம்
September 29 , 2024 293 days 230 0
ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசியப் பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் (INCOIS) ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்தப் பெருங்கடல் ஆற்றல் குறித்த தகவல் தொகுப்பு வரைபடத்தினை உருவாக்கியுள்ளனர்.
ஓத அலைகள் மற்றும் நீரோட்டங்கள் போன்ற கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து ஆற்றலை உருவாக்கச் செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் கடற்கரையோரத் தளங்களை இது வரைபடமாக்குகிறது.
இது கடற்கரையோரத்தில் உள்ள சாத்தியமான ஆற்றல் மூல தளங்களில் தனிப்பட்ட அல்லது ஒருங்கிணைந்த கடல் சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உருவாக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மதிப்பிடப்பட்ட பல்வேறு மதிப்புகளை வழங்குகிறது.
இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) ஆனது பல கடல் சார் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து சுமார் 9.2 லட்சம் டெராவாட் மணி நேர (TWh) ஆற்றலை உருவாக்கும் வகையிலான திறனைக் கொண்டுள்ளது.
இந்தியா சுமார் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள பரந்தக் கடற்கரையைக் கொண்டுள்ளது என்பதால் இது ஆற்றல் உற்பத்திக்குப் போதுமான வாய்ப்பை வழங்குகிறது.