TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ECINET செயலி

May 9 , 2025 405 days 350 0

 

  • இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, ஆணையத்தின் தற்போது உள்ள 40 கைபேசி மற்றும் வலை தளச் செயலிகளை ஒருங்கிணைப்பதற்காக ECINET எனப்படும் ஒற்றை தள எண்ணிமத் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இந்தத் தளமானது வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் குடிமைச் சமூகத்திற்கு தடையற்ற மற்றும் பயனர்களுக்கு உகந்த ஒரு இடைமுகத்தை வழங்கும்.
  • இது வாக்காளர் உதவி எண், வாக்காளர் வாக்குப் பதிவு, cVIGIL, சுவிதா 2.0, ESMS, சாக்சம் மற்றும் KYC செயலி போன்ற செயலிகளை ஒருங்கிணைக்கும்.
  • ECINET ஆனது நாடு முழுவதும் உள்ள சுமார் 100 கோடி வாக்காளர்களுக்கும் மற்றும்  10.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அரசு அதிகாரிகள் (BLO), அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட சுமார் 15 லட்சம் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (BLA), சுமார் 45 லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 15,597 உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் (AERO), 4,123 தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் 767 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (DEO) அடங்கிய முழு தேர்தல் கட்டமைப்பிற்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்