மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மூலம் இந்தியா ஒருங்குறியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்துள்ளது.
அனைத்து எண்ணிமச் சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் உரை மற்றும் உணர்வு வெளிப்படுத்திக் குறியீடுகளுக்கான உலகளாவியத் தரநிலைகளை ஒருங்குறியக் கூட்டமைப்பு அமைக்கிறது.
MeitY ஆனது ஒருங்குறியத் தொழில்நுட்பக் குழுவில் இந்தியாவிற்கு அரை வாக்குகளை வழங்கி தற்போது ஒரு துணை உறுப்பினராக உள்ளது.
தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து வாக்களிக்கும் அந்தஸ்தினைக் கொண்ட ஒரே தேசிய அரசாங்கம் இந்தியாவாகும்.
இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்திற்கான செலவினம் ஆண்டிற்கு 20,000 டாலர் (17 லட்சம் ரூபாய்) ஆகும்.
இந்தியா முன்னதாக 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக இருந்தது, மீண்டும் 2021 ஆம் ஆண்டில் சிறிது காலம் உறுப்பினராக இருந்தது.
உலகளாவியத் தொழில்நுட்ப அமைப்புகளில் இந்தி மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழிகளை அங்கீகரிக்க ஒருங்குறிய நுட்பம் உதவுகிறது.
இந்தியாவின் ஈடுபாடானது இந்திய எழுத்துக்களை இயங்கலையில் ஊக்குவிக்கும் TDIL (இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப மேம்பாடு) என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக உள்ளது.