ஒருமித்த விவாகரத்து குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
May 6 , 2023 824 days 382 0
உச்ச நீதிமன்றமானது, அரசியலமைப்பின் 142வது சட்டப் பிரிவின் கீழ் அதன் சிறப்பு அதிகாரங்களைச் செயல்படுத்துவதன் மூலம் "மீள முடியாத திருமண முறிவு" அடிப்படையிலான திருமண உறவினை முறிப்பதற்கான தீர்ப்பினைத் தான் வழங்க முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி S.K. கௌல் தலைமையிலான அமர்வானது, 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கூறப்பட்ட விவாகரத்திற்கான கட்டாய ஆறு மாதக் காத்திருப்புக் காலத்தினை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்து திருமணச் சட்டத்தின் 13Bவது சட்டப் பிரிவானது, "பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்திற்கான" வழிமுறைகளை வழங்குகிறது.
கட்டாய ஆறுமாத காத்திருப்பு காலம் என்பது விவாகரத்திற்குப் பதிவு செய்த தரப்பினர் தங்கள் மனுவைத் திரும்ப பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் வழங்கப் படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது சட்டப்பிரிவு, உச்ச நீதிமன்றமானது, அதன் முன் நிலுவையில் உள்ள எந்தவொரு விவகாரங்களுக்கும் "முழுமையான நீதி" வழங்கச் செய்வதற்காக தனது ஆணைகள் மற்றும் உத்தரவுகளை அமலாக்குவதுடன் தொடர்பு உடையதாகும்.
142(1)வது சட்டப்பிரிவின் படி, உச்ச நீதிமன்றத்தினால் இயற்றப்பட்ட ஆணை அல்லது உத்தரவு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படக் கூடியது.