'ஒரு குடும்பம், ஓர் அடையாள அட்டை' திட்டத்திற்கான இணைய தளம்
February 18 , 2023 914 days 518 0
உத்தரப் பிரதேச அரசானது, 'ஒரு குடும்பம் ஓர் அடையாளம்' என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அடையாள அட்டையினை உருவாக்கச் செய்வதற்கான ஒரு இணையத் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
'ஒரு குடும்பத்திற்கு ஒரு வேலைவாய்ப்பு' என்ற ஒரு திட்டத்தினைச் செயல் படுத்தச் செய்வதற்கான ஒரு செயல்பாட்டு அலகாக குடும்பங்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணைய தளமானது தொடங்கப் பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்களைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் இந்த அடையாள அட்டையைப் பெற முடியும்.
குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களின் அந்த அடையாள அட்டையானது அவர்களின் குடும்ப அடையாளமாகக் கருதப்படும்.