மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகமானது மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து, ஒரு மாவட்டம் ஒரு குறிப்பிட்ட பொருள் என்ற திட்டத்திற்கான பொருட்களை இறுதி செய்துள்ளது.
இந்தப் பொருட்கள் நாடு முழுவதும் 728 மாவட்டங்களுக்காக வேண்டி விவசாயம், தோட்டக் கலை, விலங்குகள், கோழிப் பண்ணை, பால், மீன் மற்றும் நீர்வளம், கடல்சார் துறை ஆகியவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்களின் பட்டியலானது மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றிடமிருந்து உள்ளீடுகளைப் பெற்ற பின்னர், இறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் இந்திய அரசுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு தொகுப்பு அணுகுமுறையில் ஊக்குவிக்கப்பட உள்ளது.
இது பொருட்களின் மதிப்பை உயர்த்துவதற்கு உதவ இருக்கின்றது.
மேலும் இதன் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாகும்.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் பிரதான் மந்திரி-எப்எம்இ (FME) என்ற திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்பட இருக்கின்றது.
226 மாவட்டங்களுக்காக பழங்களும் 107 மாவட்டங்களுக்காக காய்கறிகளும் 105 மாவட்டங்களுக்காக நறுமணப் பொருட்களும் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதன்மை உணவுப் பயிரான நெல் ஆனது 40 மாவட்டங்களுக்காகவும் கோதுமை ஆனது 5 மாவட்டங்களுக்காகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.