ஒரே இடத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னழுத்த தொழிற்கூடம்
January 13 , 2019 2400 days 802 0
ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின்னழுத்தத் தொழிற்கூடம் அமைக்கப்பட உள்ளது.
லே என்னுமிடத்திலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் கார்கிலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் நியோமா பகுதியில் உள்ள ஹான்லே/கால்தோ என்னுமிடத்தில் இந்த 5000 மெகாவாட் திறன் கொண்ட லடாக் திட்டம் அமைக்கப்படும்.
இது கார்கில் மாவட்டத்தில் உள்ள 2.5 ஜிகாவாட் திறனுடைய மற்றுமொரு சூரிய ஒளித் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப்படும்.
இந்தியாவின் சூரிய ஒளி ஆற்றல் கழக நிறுவனமானது (Solar Energy Corporation of India - SECI), லடாக்கில் உள்ள 5 ஜிகாவாட் சூரிய ஒளி பண்ணை சீனாவின் 3 ஜிகாவாட் டேடாங் சூரிய ஒளித் திட்டத்தை விட அதிக திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய திட்டமாகக் இருக்கக் கூடும் எனக் கருதுகின்றது.
இத்திட்டம் 2023-ம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு வருடாந்திரமாக 12,750 டன்கள் அளவிற்கு கார்பன்டை ஆக்சைடையும் இதர பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.