ஒரே நேர்கோட்டில் செவ்வாய் சூரியன் பூமி: சூரிய வான் இணையல்
August 28 , 2019 2261 days 775 0
செவ்வாய் கிரகத்தின் சூரிய வான் இணையல் (MSC - Mars solar conjunction) காரணமாக பூமியில் உள்ள அலை வாங்கிகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசா விண்கலத்தில் உள்ளவர்களுக்கு இடையேயான தினசரி தரவுப் பரிமாற்றமானது ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை நிறுத்தப்பட இருக்கின்றது.
MSCயின் போது, செவ்வாய் மற்றும் பூமி ஆகியவை சூரியனின் எதிர் பக்கத்தில் இருக்கும்.
சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டமான கொரோனாவிலிருந்து வெளிப்படும் வெப்பமான, அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவானது பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான வானொலி தகவல் தொடர்பில் தலையிடும்.
எனவே, விண்கலம் எதிர்பாராத நடத்தைகளை வெளிப்படுத்தும். அதன் கட்டளைகள் சிதைக்கப்படும்.