TNPSC Thervupettagam

ஒற்றைமுறை பயன்பாட்டு ஹீமோடையாலிசிஸ் கொள்கை

March 19 , 2026 15 hrs 0 min 94 0
  • அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு ஒற்றைமுறைப் பயன்பாட்டு ஹீமோடையாலிசிஸ் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • பொதுச் சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு டயலைசர்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே இக்கொள்கையின் நோக்கமாகும்.
  • தெலங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய ஒற்றைமுறைப் பயன்பாட்டு டயலைசர் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • ஒற்றைமுறைப் பயன்பாட்டு டயலைசர்கள் சிறந்த செயல்திறன், மேம்பட்ட நோயாளி பாதுகாப்பு மற்றும் தொற்று அபாயத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளை வழங்குகின்றன.
  • உலகளவில், அமெரிக்காவில் 90%, ஐரோப்பாவில் (கிழக்கு பகுதிகள் தவிர்த்து) 85% மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 98% ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைகள் ஒற்றைமுறைப் பயன்பாட்டு டயலைசர்களைப் பயன்படுத்துகின்றன.
  • இந்தியாவில், அரசுத் துறையில் மேற்கொள்ளப்படும் ஹீமோடையாலிசிஸ் சிகிச்சைகளில் சுமார் 70-80% இன்னும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய டயலைசர்களே உபயோகிக்கப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்