ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட சோதனை – கட்டுப்பாடுகள்
April 28 , 2020 1947 days 690 0
கோவிட் – 19 தொற்றுப் பரவல் 5%ற்கும் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே ஒற்றை முறையில் அதிக அளவிலான குழு முறை கொண்ட சோதனை நடத்தப்படும் (Pooled Testing) என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) அறிவித்துள்ளது.
மேலும் ICMR ஆனது இந்தச் சோதனை முறையில் 5 மாதிரிகளுக்கு மேல் ஒன்றாக கலக்கப்பட்டு மேற்கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை Pooled Testing முறையானது அந்தமான் நிக்கோபர் தீவுகள், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
Pooled Testing முறையை ஏற்றுக் கொண்ட முதலாவது ஒன்றியப் பிரதேசம் அந்தமான் நிக்கோபர் தீவாகும். இந்த முறையை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
இந்த முறையானது இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியில் வெற்றி பெற்றுள்ளது.