ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபை (Broadcasting Content Complaints Council - BCCC)
July 11 , 2018 2729 days 894 0
ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் சபையின் புதிய உறுப்பினராக முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் உதய்குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
1976 ம் ஆண்டின் மத்தியப் பிரதேசப் பணிப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான வர்மா வாஜாகத் ஹபிபுல்லாவிற்குப் பிறகு பதவியேற்றார்.
இந்தியாவில் உள்ள எல்லா செய்திகள் அல்லாத பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் தொடர்பான புகார்களினை விசாரிப்பதற்காக இந்திய ஒளிபரப்பு அடித்தளத்தினால் (Indian Broadcasting Foundation-IBF) ஜூன் - 2011ல் உருவாக்கப்பட்ட சுதந்திரமான சுய ஒழுங்குமுறை அமைப்பு BCCC ஆகும்.
இது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட 13 உறுப்பினர்களைக் கொண்ட சபை ஆகும்.