ஒளிப்படக் காட்சிப் பதிவு உதவி நடுவர் தொழில்நுட்பம்
September 4 , 2022 1044 days 566 0
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான 2022 ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் ஒளிப்படக் காட்சிப் பதிவு உதவி நடுவர் (VAR) தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட உள்ளது.
17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தத் தொழில்நுட்பம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இது புவனேஸ்வர் (கலிங்கா மைதானம்), மார்கோ (JLN மைதானம்) மற்றும் நவி மும்பை (DY பாட்டீல் மைதானம்) ஆகிய இடங்களில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
ஒளிப்படக் காட்சிப்பதிவு உதவி நடுவர் தொழில்நுட்பமானது விளையாட்டுச் சூழலை மாற்றியமைக்கும் வகையில் ஒரு கோல் அடித்திட வழி வகுக்கும் இலக்குகள் மற்றும் குற்றங்கள், பெனால்டி முடிவுகள் மற்றும் தண்டனைக்கு வழி வகுக்கும் குற்றங்கள், நேரடிச் சிவப்பு அட்டை வழங்கீட்டுச் சம்பவங்கள் மற்றும் தவறாக அடையாளம் காணுதல் போன்ற நான்கு சூழ்நிலைகளில் நடுவரின் முடிவெடுக்கும் செயல்முறைக்கு உதவுகிறது.