ஒளியணுவியல் அடிப்படையிலான உலகின் முதல் குவாண்டம் கணினி
February 7 , 2023 927 days 483 0
ஒளியணுவியல் அடிப்படையிலான, குறைவான பிழை வழங்கீட்டுத் திறன் கொண்ட உலகின் முதல் குவாண்டம் கணினியினை உருவாக்கவும் அதனை வணிக மயம் ஆக்கவும் ஒரு புதிய கூட்டு முதலீட்டினை மேற்கொள்ள உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
சிக்கலான தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க உதவும் உலகின் முன்னணி திறன்களை வழங்கும் வகையிலான திறன் கொண்ட குவாண்டம் கணினியை அந்நாடு உருவாக்க உள்ளது.
இது நிதி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாதிரியாக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.