ஒளியூட்டுதல் (Lighting) பற்றிய ஆறாவது சர்வதேசக் கருத்தரங்கம் (iSoL)
December 4 , 2019 2163 days 804 0
மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தானியங்கித் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையமானது, ஒளியூட்டுதல் தொடர்பான ஒரு சர்வதேசக் கருத்தரங்கத்தை (International Symposium on lighting - iSoL) ஏற்பாடு செய்து இருக்கின்றது.
உலகெங்கிலும் உள்ள தானியங்கி ஒளியூட்டுதல் தொடர்புடைய நிபுணர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது ஒரு பொதுவான தளத்தை வழங்குகின்றது.
தானியங்கித் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையமானது ஹரியானாவில் உள்ள மானேசரில் அமைந்துள்ளது.
இந்த அமைப்பானது உலகத் தரம் வாய்ந்த முன்னணி தானியங்கி சோதனை, சான்றிதழ் மற்றும் ஆராய்ச்சி & வளர்ச்சி சேவை வழங்குநராக உள்ளது.
இது இந்திய அரசின் NATRiP என்ற அமைப்பின் (தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி & வளர்ச்சி உள்கட்டமைப்புத் திட்டம்) கீழ் செயல்படுகின்றது.