இந்திய ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஓர் ஒழுங்குமுறை மறுஆய்வுப் பிரிவை (RRC) நிறுவுகிறது, இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து வங்கி விதிமுறைகளையும் முறையாக மதிப்பாய்வு செய்யும்.
ஒழுங்குமுறைத் துறையின் கீழ் செயல்படும் RRC வங்கிகள் மற்றும் பிற ஒழுங்கு படுத்தப் பட்ட நிறுவனங்களைப் பாதிக்கும் விதிகளை கட்டம் கட்டமாக மதிப்பாய்வு செய்யும்.
மறுஆய்வு செயல்பாட்டில் வெளிப்புற நிபுணர் கருத்துக்களைக் கொண்டு வருவதற்காக ஒழுங்குமுறை குறித்த ஒரு சுயாதீன ஆலோசனைக் குழு (AGR) உருவாக்கப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுடன், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட AGR, பங்கு தாரர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதையும், தொழில்துறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அதன் செயல்பாட்டுக் காலம் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்கது.