ஓக்லா நிறுவனத்தின் உலகளாவிய செயல்வேகச் சோதனைக் குறியீடு
June 26 , 2022 1144 days 501 0
வலையமைப்பு நுண்ணறிவு மற்றும் இணைப்பு நுண்ணறிவுச் சேவை வழங்கும் நிறுவனமான ஓக்லா என்ற ஒரு நிறுவனம், உலகளாவிய செயல்வேகச் சோதனைக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் 14.28 Mbps என்ற அளவில் சராசரி கைபேசிப் பதிவிறக்க வேகம் பதிவாகியுள்ளதாக இந்தக் குறியீடு குறிப்பிடுகிறது.
இதன் மூலம், இந்த உலகளாவியத் தரவரிசையில் இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 115வது இடத்தில் உள்ளது.
உலகளாவியக் கைபேசி செயல்வேகத்தில் நார்வே மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.