TNPSC Thervupettagam

ஓசூர் விமான நிலையத்திற்கான தள அனுமதி

November 18 , 2025 10 days 93 0
  • தமிழக அரசானது, ஓசூரில் ஒரு விமான நிலையத்தை நிறுவுவதற்கான தள அனுமதி விண்ணப்பத்தினை பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்து உள்ளது.
  • பேரிகை மற்றும் பாகலூர் இடையே உள்ள சூளகிரி தாலுக்காவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • எதிர்கால விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகளுடன் ஆரம்பத்தில் இந்த விமான நிலையத்தில் ஒரு முனையம் மற்றும் இரண்டு ஓடுபாதைகள் அமைக்கப்படும்.
  • இந்தப் பகுதியானது, HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், வான்வெளி மீதான  கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
  • எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அங்கு பயணிகள் செயல்பாடுகள் தொடங்குவதற்கான சாத்தியத்துடன், ஆறு முதல் எட்டு மாதங்களில் தள அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்