TNPSC Thervupettagam

ஓய்வேற்பு விடுப்புத் திட்டம்

August 7 , 2025 15 days 43 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையான ஓய்வேற்பு விடுப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்திய முதல் இந்திய மாநிலமாக சிக்கிம் மாறியது.
  • அரசு ஊழியர்களிடையே தனிப்பட்ட வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவினை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவையை ஆற்றிய ஊழியர்கள் ஐம்பது சதவீத அடிப்படை ஊதியத்துடன் 365 முதல் ஆயிரத்து எண்பது நாட்கள் வரை இதில் விடுப்பு எடுக்கலாம்.
  • இந்தத் திட்டமானது ஊழியர்களின் வயது மூப்புத்தன்மையைப் பாதுகாக்கிறது மற்றும் ஒரு மாத அறிவிப்புடன் அவர்களை பணிக்குத் திரும்ப அழைக்கவும் வேண்டி அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது.
  • தற்காலிக ஊழியர்களும், சமமானச் சலுகைகளுடன் ஆறு மாத கால தொடர்ச்சியான பணிக்குப் பிறகு இத்தகைய விடுப்பினைப் பெறலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்