ஓரினச் சேர்க்கை திருமணத்தினைச் சட்டப்பூர்வமாக்கிய எஸ்தோனியா
June 24 , 2023 790 days 339 0
எஸ்தோனியாவின் பாராளுமன்றமானது ஓரினச்சேர்க்கைத் திருமணத்தினைச் சட்டப் பூர்வமாக்கும் ஒரு சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது.
இரண்டு பருவ வயதினரும் "தாங்கள் எந்தப் பாலினத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதனைப் பொருட்படுத்தாமல்" திருமணம் செய்து கொள்ளலாம் என்று இதில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் திருத்தப்பட்டச் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இதன் மூலம், இத்தகைய சட்டத்தினை நிறைவேற்றிய முதலாவது முன்னாள் சோவியத் நாடு என்ற பெருமையை எஸ்தோனியா பெற்றது.