அமெரிக்காவானது வெனிசுலாவின் கனிம வளம் நிறைந்த ஓரினோகோ மண்டலம் மற்றும் கயானா கேடயப் பகுதி மீது கவனம் செலுத்தியுள்ளது.
வெனிசுலாவில் உள்ள ஓரினோகோ மண்டலமானது, உலகின் மிகப்பெரிய கூடுதல் கன கச்சா எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது.
இது குவாரிகோ, அன்சோவாடெகுய், மொனாகாஸ், அமகுரோ டெல்டா மற்றும் பொலிவார் மாநிலங்கள் முழுவதும் அமைந்துள்ள ஓரினோகோ நதிப் படுகையில் அமைந்துள்ளது.
கயானா கேடயப் பகுதி என்பது வெனிசுலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் பரவியுள்ள ஒரு பழமையான ப்ரீகேம்ப்ரியன் காலப் புவியியல் பகுதியாகும்.
இது பரந்த வெப்ப மண்டலக் காடுகள், நன்னீர் வளங்கள் மற்றும் தங்கம், பாக்சைட், வைரங்கள் மற்றும் இரும்புத் தாது போன்ற கனிமப் படிவுகளைக் கொண்டுள்ளது.
இதில் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, ரொரைமா மலை மற்றும் பிக்கோ டா நெப்லினா போன்ற புகழ்பெற்ற அம்சங்களும் அடங்கும்.