TNPSC Thervupettagam

ஓஷன் ஐ (Ocean Eye) சர்வதேச கூட்டணியில் இந்தியா

November 25 , 2026 13 hrs 0 min 16 0
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று உலகளாவிய பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பிற்கான (GOOS) ஓஷன் ஐ (Ocean Eye) சர்வதேச கூட்டணியில் இந்தியா இணைந்ததுடன், இந்தியப் பெருங்கடல் முழுவதும் தனது கடல் கண்காணிப்பு வலையமைப்பை இரட்டிப்பாக்கவும் உறுதியளித்துள்ளது.
  • ஓஷன் ஐ சர்வதேச கூட்டணி என்பது பெருங்கடல் மற்றும் காலநிலை அமைப்புகளை மேம்பட்ட முறையில் புரிந்துகொள்வதற்காக கடல் கண்காணிப்பு, தரவுப் பகிர்வு மற்றும் கடல்சார் அறிவியலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட GOOS உடன் தொடர்புடைய ஒரு உலகளாவிய கூட்டு முயற்சியாகும்.
  • GOOS-க்கு நீண்டகால நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைத் திரட்டவும், உலகளாவிய கடல் கண்காணிப்பை வலுப்படுத்தவும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவால் இந்தக் கூட்டணி கூட்டாகத் தொடங்கப் பட்டது.
  • துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP31), பெருங்கடல்கள், கடல்கள், இயற்கை மற்றும் நிலப் பயன்பாட்டு தினத்தின் போது இந்தியா தனது இணைப்பை அறிவித்தது.
  • அல்பேனியா மற்றும் மான்டேரி பே அக்வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் (MBARI) ஆகியவையும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்