இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது ககன்யான் செயல்பணி பெட்டக உந்துவிசை அமைப்பினுடைய செயல்முறை மாதிரி அமைப்பின் முதல் வெப்பச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இது தமிழகத்திலுள்ள மகேந்திரகிரியில் அமைந்த உந்துவிசை சோதனை வளாகத்தில் மேற்கொள்ளப் பட்டது.
450 விநாடிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையானது சோதனை நோக்கத்தினையும் சோதனைக்கு முந்தைய கணிப்புகளையும் பூர்த்தி செய்தது.
இந்த அமைப்பானது விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான இந்தியாவின் முதலாவது திட்டமான ககன்யான் திட்டத்தின் ககன்யான் உலாவி மாதிரியின் ஓர் அங்கமாகும்.