TNPSC Thervupettagam

ககன்யான் திட்டம் குறித்த புதிய தகவல்

May 10 , 2025 2 days 40 0
  • இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான 'ககன்யான்' தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
  • இந்த முதலாவது மனித விண்வெளிப் பயணம் ஆனது, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • இஸ்ரோ நிறுவனமானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் TV-D1 திட்டம் மற்றும் முதல் ஆளில்லா விண்வெளிப் பெட்டக வாகனப் பிரிப்புச் சோதனையை மிக வெற்றிகரமாக நிறைவு செய்தது.
  • இரண்டாவது விண்கல வாகனச் சோதனைத் திட்டமானது (TV-D2) 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்ற ஒரு நிலையில்  அதைத் தொடர்ந்து ககன்யானின் ஆளில்லாச் சுற்றுக் கலங்களின் சோதனையானது மேற்கொள்ளப்படும்.
  • மனிதர்களைச் சுமந்து செல்லும் LVM3 வாகனம், விண்வெளி வீரர் குழு வெளியேறும் வசதி அமைப்பு மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் பெட்டகம் மற்றும் சேவை வழங்கீட்டு பெட்டகம் ஆகிய அனைத்தும் தற்போது சோதனை மற்றும் அதற்கான ஒருங்கிணைப்பின் இறுதிக் கட்டங்களில் உள்ளன.
  • 'ககன்யான்' ஆளில்லாச் சுற்றுக் கலமானது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்