உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாபினா கள ஆயுத ஏவல் தளத்தில் ககன்யான் வீரர்கள் பெட்டகத்திற்கான வான் மிதவைகளின் (பாராசூட்) முக்கிய சோதனையை இஸ்ரோ நடத்தியது.
ககன்யான் பணிக்கான பாராசூட் அமைப்பைத் தகுதிப்படுத்துவதற்காக வேண்டி ஒருங்கிணைந்த பிரதான வான் மிதவை தரையிறக்கச் சோதனைகளின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வீரர்கள் பயணப் பெட்டகத்தின் வான் மிதவை அமைப்பு, நிலைப்படுத்தப்பட்ட தரை இறக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு வகையான பத்து பாராசூட்களைக் கொண்டுள்ளது.
இதன் வடிவமைப்பைச் சரிபார்க்க இரண்டு முக்கியப் பாராசூட்டுகளுக்கு இடையில் தாமதமாக துண்டிக்கப்படுவதை உள்ளடக்கிய ஒரு தீவிரச் சூழ்நிலையை இந்தச் சோதனை செயல் விளக்கியது.
இந்திய விமானப்படையின் IL-76 விமானத்தைப் பயன்படுத்தி 2.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து ஓர் உருவகப்படுத்தப்பட்ட வீரர்கள் பயணப் பெட்டகம் கீழே விடப்பட்டது.
பாராசூட் செயல்பாடு இதில் திட்டமிட்டபடி செயல்பட்டது என்பதோடுஇந்த அமைப்பு நிலையான இறக்கம் மற்றும் மென்மையான தரையிறக்கத்தை அடைந்தது.