ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளிப் பயிற்சி மையம்
February 14 , 2020 2092 days 795 0
ககன்யான் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இந்திய விண்வெளி வீரர்கள் “ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளிப் பயிற்சி மையத்தில்” (Gagarin Research and Test Cosmonaut Training Centre - GCTC) தங்கள் பயிற்சியைத் தொடங்கினர்.
GCTC என்பது விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி அமைப்பாகும்.
இது ரஷ்யாவின் மாஸ்கோவில் அமைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) செலுத்தப் பட உள்ள இந்தியாவின் முதலாவது மனித விண்வெளித் திட்டம் ககன்யான் ஆகும்.