விக்ரமஷீலா கங்கை டால்பின் சரணாலயத்தில் (VGDS - Vikramshila Gangetic Dolphin Sanctuary) கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய விதிமுறைகளை மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
VGDS ஆனது பீகாரின் கங்கை நதியின் மீது சுல்தான்கஞ்ச்சிலிருந்து காஹல்கஞ்ச் வரை பரவியுள்ளது. நாட்டில் உள்ள ஒரே டால்பின் சரணாலயம் இதுவாகும்.
மேற்கு வங்கத்தின் ஹால்டியாவையும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் இணைக்கக் கூடிய தேசிய நீர்வழிப் பாதை – 1 ஆனது VGDS வழியாகச் செல்கின்றது.
கப்பல்களின் வேகக் கட்டுப்பாடு, நச்சுத் தன்மையற்ற சாயங்களைப் பயன்படுத்துதல், கப்பலில் சுழலும் இயந்திரத்தில் பாதுகாப்புக் கலனைப் பொருத்துதல் ஆகியவை இந்த கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளாகும்.