TNPSC Thervupettagam

கங்கை நதி வெள்ளச் சமவெளி எல்லை நிர்ணயம் - உத்தரப் பிரதேசம்

September 14 , 2026 15 hrs 0 min 13 0
  • உன்னாவ் முதல் பலியா வரையிலான 700 கி.மீ தூரமுள்ள கங்கை நதியின் வெள்ளச் சமவெளி எல்லை நிர்ணயம் செய்யும் பணி 13 மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநிலம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் (NGT) தெரிவித்துள்ளது.
  • ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுப்பதற்கு உதவும் வகையில், வெள்ளச் சமவெளிப் பகுதியைக் குறிக்க மொத்தம் 7,350 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • யமுனை, ராம்கங்கா, பெட்வா, சுவாவ், தேடி, புத்தி கங்கை, சோலானி மற்றும் கோக்ரி உள்ளிட்ட துணை நதிகளுக்கான வெள்ளச் சமவெளிப் பகுதி எல்லையை வரையறுக்கும் பணியும் முடிக்கப்பட்டுள்ளது.
  • கோமதி, காக்ரா மற்றும் ராப்தி நதிகளின் எல்லையை வரையறுக்கும் பணியை 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணியானது, கங்கை நதி அதிகார சபை உத்தரவு, 2016 மற்றும் முந்தைய NGT வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்குத் துணைபுரிகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்