TNPSC Thervupettagam

கங்லா தொங்பி போர்

April 10 , 2019 2294 days 1132 0
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று கங்லா தொங்பி போரின் 75வது ஆண்டு பிளாட்டின நினைவு தினமானது இராணுவப் போர்த் தளவாடப் படையினால் இம்பாலுக்கு அருகில் உள்ள கங்லா தோங்பி போர் நினைவகத்தில் அனுசரிக்கப்பட்டது.
  • இது இரண்டாம் உலகப் போரின் மிகக் கடுமையான போராகக் கருதப்படுகின்றது.
  • இது 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதி இரவு மற்றும் 07 ஆம் தேதியில் ஜப்பானியப் படைகளுக்கு எதிராக 221 மேம்பட்ட போர்த் தளவாட படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களால் போரிடப்பட்டது.
  • இந்தப் போரானது இரண்டாம் உலகப் போரின் தென் கிழக்கு ஆசிய அரங்கின் ஒரு பகுதியாக ஜப்பானின் பர்மாவை நோக்கிய இலக்கின் மீதான திருப்பு முனைகளில் ஒன்றாகும்.
  • இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் கோஹிமாப் போரும் நடைபெற்றது. இந்த இரண்டு போர்களிலும் மிகப் பெரிய இழப்புகளை ஜப்பான் சந்தித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்