2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கஜகஸ்தானின் புல்வெளிப் பகுதியில் இரண்டு பிரஸெவால்ஸ்கி (Przewalski) குதிரைக் குட்டிகள் பிறந்தன, இது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நிகழ்ந்த முதல் பிறப்பைக் குறிக்கிறது.
லகின் கடைசி உண்மையான காட்டு குதிரையாக கருதப்படுகிற பிரஸெவால்ஸ்கி குதிரையானது ஒருபோதும் பழக்கப்படுத்தப்படவில்லை.
காடுகளிலிருந்து மறைந்துவிட்ட இந்த இனம் கடைசியாக 1969 ஆம் ஆண்டில் கோபி பாலைவனத்தில் இது தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய உயிரியல் பூங்காக்களில் இருந்து 22 குதிரைகள் கஜகஸ்தானின் அலிபி மறு அறிமுக மையத்திற்கு காட்டில் வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
2029 ஆம் ஆண்டிற்குள் 40 பிரஸெவால்ஸ்கி குதிரைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கஜகஸ்தான் இலக்கு கொண்டுள்ளது, சுதந்திரமாகத் திரியும் நிலையான எண்ணிக்கையை நிறுவுவது அதன் நீண்டகால இலக்காகும்.