April 13 , 2023
843 days
349
- அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கஜ் உத்சவ் -2023 எனும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் .
- இந்தியாவில் யானைகளுக்கு ஏற்படும் சவால்களைத் தணித்து யானைகளுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வானது இந்தியாவில் யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் 30வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படுகிறது .
- யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப் பட்ட ஒரு முதன்மையான பாதுகாப்புத் திட்டம் ஆகும்.
- ஆசிய யானைகளின் அதிக எண்ணிக்கைக்குப் பெயர் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Post Views:
349