இந்திய ஒன்றிய அரசாங்கமானது புதிய கடன் மதிப்பீட்டு மாதிரியை (CAM) அறிமுகப் படுத்தியது.
இது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு (MSMEs) டிஜிட்டல் மற்றும் தானியங்கி கடன் மதிப்பீட்டை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வங்கியில் ஏற்கனவே உள்ள (ETB) மற்றும் வங்கியில் புதிதாக (NTB) MSME கடன் வாங்குபவர்களின் கடன் விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்கு CAM சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் தரவைப் பயன்படுத்துகிறது.
அரசாங்கம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகியவை டிஜிட்டல் சார் பண வழங்கீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளில் RuPay ஊக்கத்தொகைகள், BHIM-UPI (ஒரு நபரிடமிருந்து வணிகருக்கு) ஆதரவு மற்றும் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (PIDF) ஆகியவை அடங்கும்.