TNPSC Thervupettagam

கடன் வாங்குவோர் தளம்

April 20 , 2026 2 days 58 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான IMF-உலக வங்கி வசந்த கால கூட்டங்களில் வளரும் நாடுகள் முதன்முறையாக 'கடன் வாங்குவோர் தளத்தை' தொடங்கின.
  • ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும், கடன் பிரச்சனைகளில் கடன் வாங்கும் நாடுகளுக்கு ஒரு கூட்டுக்குரலை வழங்குவதையும் இத்தளம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) இதன் செயலகமாகச் செயல்பட்டு ஆதரவளிக்கும்.
  • நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் அறிவையும் தீர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மன்றத்தை இது வழங்குகிறது.
  • வளரும் நாடுகள் அதிக கடனை எதிர்கொள்கின்றன; அவற்றின் வெளிநாட்டுக் கடன் சுமார் 11.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதோடு, திருப்பிச் செலுத்தும் சுமையையும் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்