கடற்படைப் புத்தாக்கம் மற்றும் சுதேச அமைப்பானது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரால் தொடங்கப் பட்டுள்ளது.
இது ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தின் பார்வைக்கு ஏற்ப பாதுகாப்பில் தன்னிறைவு பெறுவதற்கான புதுமை மற்றும் உள்நாட்டுமயமாக்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஒரு மூன்று அடுக்கு அமைப்பாகும்,
கடற்படைத் தொழில்நுட்ப முடுக்க மன்றம் (Naval Technology Acceleration Council)
கடற்படைத் தொழில்நுட்ப முடுக்க மன்றத்தின் கீழ் செயல்படும் குழுவானது திட்டங்களைச் செயல்படுத்தும்.
தொழில்நுட்ப மேம்பாட்டு முடுக்கக் கூடமானது (Technology Development Acceleration Cell) ஒரு விரைவான காலக் கட்டத்தில் அதிகரித்து வரும் ஆபத்தான தொழில்நுட்பத்தை உய்த்தறிய உருவாக்கப்பட்டுள்ளது.