TNPSC Thervupettagam

கடலூரில் H5N1 பாதிப்பு

November 16 , 2026 5 days 110 0
  • தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கட்டியங்குப்பத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று அதிக வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சலான (HPAI) H5N1 உறுதி செய்யப்பட்டது.
  • இதன் மாதிரி போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்தால் (NIHSAD) பரிசோதிக்கப்பட்டது.
  • H5N1 என்பது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் ஒரு துணை வகையாகும்; இது முக்கியமாகப் பறவைகளைப் பாதிக்கும் பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
  • H5N1 என்ற பெயர் ஹேமாக்ளூட்டினின் (H5) மற்றும் நியூராமினிடேஸ் (N1) ஆகிய இரண்டு மேற்பரப்புப் புரதங்களைக் குறிக்கிறது.
  • இது கோழிகளில் கடுமையான நோயை ஏற்படுத்தும்போது அதிக வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சல் (HPAI) என வகைப்படுத்தப்படுகிறது.
  • காட்டு நீர்வாழ் பறவைகள் பறவைக் காய்ச்சல் வைரஸ்களின் இயற்கையான வாழிடமாகும்.
  • பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மாசுபட்ட சூழல்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் H5N1 பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்குப் பரவக்கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்