கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் (Coastal Regulation Zonal Management)
September 4 , 2018 2453 days 1134 0
தமிழ்நாடு அரசு, கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் இறுதி வரைவை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தத் திட்டமானது, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களையும் 28 தீவுகளையும் உள்ளடக்கிய கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்காக 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை 6 பிரிவுகளாக பிரிக்கின்றது. (6 Coastal Regulation Zones - கடலோர ஒழுங்குமுறை மண்டலம்)
அவை CRZ IA, CRZ IB, CRZ II, CRZ III, CRZ IVA மற்றும் CRZ IVB எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா ஒன்று இம்மாநிலத்தில் உள்ளது.