கடலோர மீன்வளர்ப்பு ஆணையம் (திருத்தம்) மசோதா – 2023
August 19 , 2023 699 days 357 0
2023 ஆம் ஆண்டு கடலோர மீன்வளர்ப்பு ஆணையம் (திருத்தம்) மசோதாவானது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது, தெளிவற்ற நிலைகளை நிவர்த்தி செய்யவும், நிர்வாகச் செயல் முறைகளை நெறிமுறைப் படுத்தவும், வளர்ந்து வரும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் முயல்கிறது.
அனைத்துக் கடலோர மீன்வளர்ப்பு நடவடிக்கைகளையும் இந்தச் சட்டத்தினுடைய ஒரு வரம்பின் கீழ் கொண்டு வருவதை இந்தத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது கடலோர மீன் வளர்ப்பு முறையின் பல்வேறு அம்சங்களுக்கு இடையே உள்ள ஒரு தெளிவின்மையை நீக்குகிறது.
இறால் வளர்ப்பிற்கு அப்பாற்பட்ட, மேலும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான மீன்வளர்ப்பு நடைமுறைகளின் பரிணாம வளர்ச்சியை இது அங்கீகரிக்கிறது.
இது ஆணையத்தினால் மதிப்பிடப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான சேதம் அல்லது வீழ்ச்சிகளுக்கு ஆகும் பல்வேறு செலவினங்களை இந்த மீன்வளர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் என்ற 'மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கான கட்டணக் கொள்கையை' வலியுறுத்துகிறது.
மீன்குஞ்சுப் பொரிப்பகங்கள், இனப்பெருக்க விலங்கினப் பெருக்கல் மையங்கள் (BMC), மற்றும் உட்கரு இனப்பெருக்க மையங்கள் (NBC) போன்ற நிறுவனங்கள் தற்போது கடல் அலையேற்றக் கோட்டுப் பகுதியிலிருந்து (HTL) 200 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளன.