TNPSC Thervupettagam

கடல்சார் கொடி விதிகள் 2026

November 20 , 2026 11 hrs 0 min 35 0
  • கடலில் இந்தியக் கப்பல்கள் ஏற்றும் கொடிகளை நிர்வகிக்கும் புதிய விதிமுறைகளை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த புதிய விதிகள், வணிகக் கப்பல் சட்டம், 2025-இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • திருத்தப்பட்ட விதிகளின்படி, வணிகக் கப்பல் சட்டம், 2025-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய வணிகக் கப்பல்கள் சிவப்புக் கொடியை (Red Ensign) ஏற்றும்.
  • கொடியானது சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் கொடிக் கம்பத்திற்கு மிக அருகில் உள்ள மேல் பகுதியில் (upper canton) இந்திய தேசியக் கொடி இடம்பெறும்.
  • இந்தியாவின் கொடிக் குறியீடு, 2002-இன் படி, அதன் நீளம் அதன் அகலத்தைப் போல் ஒன்றரை மடங்கு இருக்கும்.
  • இதற்கிடையில், அரசுக்குச் சொந்தமான கப்பல்கள், அவை வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், நீலக் கொடியை (Blue Ensign) ஏற்றும்.
  • இந்தக் கப்பல்கள், தங்களுக்குச் சொந்தமான துறை, அதிகாரம் அல்லது அமைப்பின் சின்னத்தைக் கொண்டிருக்கும்.
  • பாதுகாப்பு அமைச்சகத்திற்காக பிரத்தியேகமாக இயங்கும் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல்களுக்கு இந்த விலக்கு பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்