மத்தியத் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகளை மும்பையில் தொடங்கினார்.
இது இந்தியாவில் உள்ள பயணக் கப்பல்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்களில் பயணம் செய்யும் போது அந்தக் கப்பலில் உள்ளவர்களுக்கு குரல், தரவு மற்றும் காணொளிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் கடலில் இருப்பவர்களுக்கு ஒரு உயர் நிலையிலான ஆதரவை வழங்கும்.
விசாட் தீர்வுகள் வழங்கும் ஒரு டாடா நிறுவனமான ‘நெல்கோ’ ஆனது கடல்சார் துறைக்கு அகலக்கற்றைச் சேவைகளை வழங்கும் இந்தியாவின் முதலாவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது.