கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச ஒப்பந்தம்
March 8 , 2026 2 days 37 0
இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை கடற்கணை மூலம் தாக்கியது.
1979 ஆம் ஆண்டு கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் (SAR) கீழ் இலங்கை மாலுமிகளை மீட்டது.
1979 ஆம் ஆண்டு SAR (தேடல் மற்றும் மீட்பு) மாநாடு, கடலில் துன்பத்தில் உள்ள மக்களை மீட்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
இது உலகின் பெருங்கடல்களை தேடல் மற்றும் மீட்புப் பகுதிகளாகப் பிரிப்பதுடன் அங்கு கடலோர நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றன.
கப்பல்கள் மற்றும் கடலோர நாடுகள் கடலில் துன்பத்தில் உள்ள மக்களுக்கு, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், உதவ வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கோருகிறது.
இந்தியாவில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இந்தியக் கடலோரக் காவல் படையால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தியா 2001 இல் SAR ஒப்பந்தத்தை அங்கீகரித்து, இந்தியத் தேடல் மற்றும் மீட்புப் பகுதியில் (ISRR) மீட்பு நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.