கடல்சார் பகுதிகளில் உள்ள கனிமச் சுரங்க அறக்கட்டளை விதிகள் 2024
August 23 , 2024 345 days 264 0
இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள கனிம ஆய்வு மற்றும் உற்பத்தியை மேற் பார்வையிடுவதற்கான முதல் கட்டமைப்பை இது நிறுவுகிறது.
இந்தப் புதிய விதிகளின்படி, கடலோரச் சுரங்கங்களின் உற்பத்தி மீதான குத்தகையை வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்கள் உரிமக் கட்டணத்தில் சுமார் 10 சதவீதத்தினை அரசாங்கத்திற்குச் செலுத்துவதன் மூலம் அந்த அறக்கட்டளைக்கு அவை பங்களிக்க வேண்டும்.
இந்தத் தொகையானது இந்தியப் பொதுக் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டு அது அந்த அறக்கட்டளையின் முன்னெடுப்புகளுக்கான நிதி ஆதாரமாக விளங்கும்.
சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் சமூக நலனை உறுதி செய்வதோடு, நிலையான சுரங்க வேலைப்பாடுகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதே அறக்கட்டளையின் ஒரு முதன்மை நோக்கமாகும்.