பாராளுமன்றமானது 2021 ஆம் ஆண்டு கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகள் மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 1927 ஆம் ஆண்டு கலங்கரை விளக்கச் சட்டத்தினை ரத்து செய்து அதற்குப் பதிலாக இதனைச் சட்டமாக்க உள்ளது.
இந்தியாவில் கடல்சார் போக்குவரத்திற்கான உதவிகளை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு கட்டமைப்பினை இந்த மசோதா வழங்க முனைகிறது.
இந்த மசோதாவின் படி மாவட்டங்களுக்கான தலைமை இயக்குநர், துணைத் தலைமை இயக்குநர்கள் அல்லது இயக்குநர்கள் ஆகியோரை மத்திய அரசு நியமிக்க உள்ளது.
அதன் தலைமை இயக்குநர், இந்தப் போக்குவரத்திற்கான உதவிகள் தொடர்பான விசயங்களில் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குவார்.
இதன் விதிமுறைகளானது கடற்கரையோரப் பகுதிகள், கண்டத் திட்டு மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கடல்சார் மண்டலங்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்தும்.