இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற் கொண்டுள்ளன.
இது கொழும்பு நகரில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலம் ஒரு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் ஒரு மையக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இது இந்தியப் பெருங்கடலின் ஒரு பிராந்தியத்தில் கடல்சார் ரீதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தச் செய்யும் என்பதால் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியமானதாகும்.