கடல்சார் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கடல் சார் வள அறக்கட்டளையைத் (TNMRF) தொடங்கியது.
TNMRF ஆனது அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் மற்றும் பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள் மற்றும் கடல்சார் புல் இனங்களின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மறு சீரமைக்கும்.
இந்த அறக்கட்டளையானது சுற்றுச்சூழலுக்கு உகந்தச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சார் கல்வி, பல்லுயிர்ப்பெருக்கங்களின் ஆய்வு அறிக்கை மற்றும் கடல் சார் புவியியல் தகவல் அமைப்புகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்.
மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலோர கைவினைப் பொருட்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளில் மீனவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் இது நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிக்கும்.
மணாலி எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்புச் சபை (MERRC) ஆனது, அதிக சுற்றுச்சூழல் பாதிப்பு கொண்ட மணாலி-எண்ணூர் பகுதியை மீட்டெடுக்கத் தொடங்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எண்ணெய் கசிவுக்குப் பிறகு நிறுவப்பட்ட MERRC பசுமைத் திட்டங்கள், நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
வெள்ளம், புயல் மற்றும் தொழில்துறை விபத்துகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு தண்டையார்பேட்டையில் ஒரு நவீன அவசரகால மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.